1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (19:37 IST)

2024 தேர்தலில் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளரா? பெரும் பரபரப்பு

nithiesh
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதீஷ்குமார் நிறுத்தப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
 தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நிதிஷ்குமார் ஏன் பிரதமராகக் கூடாது என துணை முதலமைச்சர் தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார் 
 
ஒரு மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி பிரதமராக முடியும் என்றால் நிதிஷ்குமாரும் பிரதமராக முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
தற்போதைய நிலையில் எதிர்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு ஆளுமையை இந்திய மக்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்