வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:30 IST)

கருப்பு பணத்தை வெளியே கொண்டு வராமல் கருப்பு துணி குறித்து பேசுவதா? பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்!

congress
கருப்பு பணத்தை வெளியே கொண்டு வராமல் கருப்புத்துணி குறித்து பேசுவதா? என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருப்பு உடை அணிந்து தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி கருப்பு துணியால் மட்டும் மக்கள் உங்கள் பக்கம் மாறிவிட மாட்டார்கள் என கேலியாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியபோது கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர நடவடிக்கை எதுவும் செய்யாத பிரதமர் மோடி கருப்புத்துணி பற்றி பேசுவதா என்றும் வாய்ஜாலம் காட்டுபவர் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்
 
கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தியதை பிரதமர் மோடி விமர்சித்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது