செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 மே 2020 (11:13 IST)

நேரா பணம் குடுக்குறதால எந்த பலனும் இல்ல! – நிதியமைச்சர் ஓபன் டாக்!

பொருளாதார மேம்பாட்டு நிதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதை நேரடியாக மக்களிடம் கொடுப்பதால் பலன் இல்லை என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசு 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்ட தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு உதவும் வகையில் இல்லை என்றும், மக்களுக்கு நேரடியாக பணம் கிடைக்கும் வகையில் திட்டங்களை அறிவிக்கவும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “மக்களுக்கு நேரடியாக பணம் அளிப்பதன் மூலம் பொருளாதார சரிவை மேம்படுத்த முடியாது. வங்கிகள் மற்றும் தொழில்துறைகள் மூலம் பணம் அளிக்கும்போது பொருளாதார நிலை உயரும்” என கூறியுள்ளார்.

நிதியமைச்சர் ஒருங்கமைக்கப்பட்ட தொழில்நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை மையப்படுத்தியே நிதி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஒருங்கமைவற்ற தினக்கூலி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளை குறித்தும் சிந்திக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.