அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களிடம் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களை அறிவித்தார். இந்த சிறப்புத் திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த 4 நாட்களாக விரிவான விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்.
இன்று 5 வது நாளாக 5 வது கட்ட அறிக்கைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.
அதில், அனைத்து பொதுத்துறைகளும் தனியார் மயமாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
கட்டுப்பாடுகள் இன்றி அனைத்து துறைகளிலும் தனியாருக்கு அனுமதியளிக்கப்படும். பாதுகாப்பு போன்ற தேவைப்படும் துறைகளில் மட்டுமே பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும். ஒரே துறையில் நான்குக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இங்கி வருன்மானால் அவை ஒன்றிணைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து எளிதாக தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.