காற்றில் வந்த கடிதத்திற்கு பதில் சொன்ன நிதியமைச்சர்: நடந்தது என்ன?

Last Updated: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (15:22 IST)
கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பார்வையிட்ட போது, அவரை நோக்கி வீசப்பட்ட கடிதத்திற்கு தீர்வு வழங்கியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பெலகாவி, பாகல்கோட்டை, யாத்கிரி, மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அணைகள் நிரம்பின. மேலும் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

இதை தொடர்ந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது அவரின் காரை நோக்கி ஒரு பெண் ஒரு கடிதத்தை வீசியுள்ளார். உடனே காரை நிறுத்தச்சொல்லி, காரை விட்டு இறங்கிய நிர்மலா சீதாராமன், அந்த கடிதத்தில் எழுதியிருந்ததை படித்தார்.

அதில், ”வெள்ளத்தில் வீடின்றி தவிக்கும் தனக்கு ஒரு வீடு கட்டு தருமாறு” கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. உடனே அந்த பெண்ணை அழைத்து பேசிய நிதியமைச்சர், “பிரதமர் மோடியின்  வீடு வழங்கும் திட்டம் குறித்து விளக்கி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் வீடு கட்டித் தரப்படும் என உறுதி அளித்தார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :