திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2019 (18:21 IST)

"பிஜேபி கொண்ட பார்வை" அஜித்தை தன் ஸ்டைலில் பாராட்டிய பார்த்திபன் !

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பார்த்திபன் வித்யாசமான சிந்தனையாளர் என்பது அனைவரும் அறிந்ததே. எல்லோரையும் விட சற்று மாறுபட்டு வித்யாசமான கோணத்தில் சிந்தித்து படம் இயக்குவது, தனது நடிப்பில் தனித்துவமான திறமையை வெளிக்காட்டுவது என அனைத்திலும் சிறந்து விளங்குவார். 


 
அந்த வகையில் தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வித்தியாசமாக பாராட்டியுள்ளார்.
 
அதாவது,  "நேரு கொண்ட பார்வை, காங்கிரஸ் கொண்ட பார்வை , BJP கொண்ட பார்வை, காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை, பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக 'நேர் கொண்ட பார்வை' மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக! ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜீத் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்” என்று பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் அஜித்துடன் இருக்கும் "நீ வருவாயென" படத்தின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.