’எங்களின் அடுத்த அஜண்டா இதுதான் ’ - சுப்பிரமணிய சுவாமி சூளுரை !
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து ஜம்முவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.
இதனால் அம்மாநிலத்தில் இணைய துண்டிப்பு முடக்கப்பட்டு, முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இதற்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாநில தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தததற்கு மாநிலங்களவையில் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காஷ்மீர் சட்டபிரிவை ரத்து செய்த பாஜக அரசுக்கு அதிமுக ஆதவளித்துள்ளது. எனவே அதிமுக என்ற பெயரை அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என மாற்றிக்கொள்ளலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து ஜம்முவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இணைய துண்டிப்பு முடக்கப்பட்டு, முக்கிய தலைவர்கள் வீட்டுகாவலில் வைக்கப்பட்டனர், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுமாவி மாநிலங்களவையில் பேசினார். அப்போது. எங்களின் அடுத்த அஜெண்டா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் என்று அவர் தெரிவித்தார்.