வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (16:27 IST)

மார்ச் 3, காலை 6 மணி: நிர்பயா குற்றவாளிகளுக்கு தேதி குறித்த நீதிமன்றம்!!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் பிறப்பிப்பு.
 
டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. தீர்ப்பு கூறப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் தண்டனையை நிறைவேற்றாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. 
 
மாறி மாறி சீராய்வு மனுக்கள் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்து கொண்டே இருப்பதால்தான் இந்த கால தாமதம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கில் ஏற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.