புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (14:33 IST)

டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் - அரவிந்த் கெஜ்ரிவால்
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் தேர்தலில் அரவிந்த் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைப் பிடித்து வென்றது. 
 
எனவே வரும் 16ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என அறிவித்தபடி இன்று அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லியில் மூன்றாம் முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன், டெல்லி மணீஷ் சிசோடியா உள்பட 6 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில், பேபி மப்ளர் மேனுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இவ்விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
 
டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்ப்பார்க்கிறேன். டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் என தெரிவித்தார்.டெல்லியின் மகன் முதல்வராகப் பதவியேற்றுள்ளதால் மக்கள் பயப்படத்தேவையில்லை. கட்சி, மதம், சாதி பேதமின்றி 5 ஆண்டுகளுக்கும் அனைவருக்காகவும் பாடுபடுவேன் . டெல்லி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.