செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (16:37 IST)

நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நீதிபதி...

Judge who fainted in court

2012 ஆம் ஆண்டு, டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயா வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணையின்போது,  உச்ச நீதிமன்றத்தில் அறைக்குள் பெண் நீதிபதி ஆர். பானுமதி மயங்கி விழுந்தார்.
 
நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 பேரும் தனித்தனியாக சட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனவே குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்து வந்த பெண் நீதிபதி இன்று அறையில் மயங்கி விழுந்தார். அவருக்கு பிற நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற ஊழியர்களும் மயக்கம் தெளிய உதவினர்.
 
அதன்பின், வீல் சேர் கொண்டு வரப்பட்டு நீதிபதியை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காலையில் நீதிபதி மயங்கி விழுந்ததால் மாலைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.