1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Night lockdown in Karnataka

ஒமிக்ரான் எதிரொலி: தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்!

ஒமிக்ரான்
தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் இந்தியாவில் படிப்படியாக பரவி வருகிறது என்பதும் 400க்கும் அதிகமானோர் இந்தியாவில் ஒமிக்ரான் வரைஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 29 பேர்களுக்கு  ஒமிகிரான் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அம்மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் இந்த ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளனர்.
About Writer
siva