1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (10:01 IST)

17 ஆண்டுகள் கழித்தும் மறக்காத துயரம்! – சுனாமி நினைவு தினம்!

2004ம் ஆண்டில் தமிழகத்தை உலுக்கிய சுனாமி கோரத்தாண்டவத்தின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2004ம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை உள்பட 14 நாடுகள் சுனாமி அலையால் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை தொடங்கி கன்னியாக்குமரி வரை கடற்கரையோர பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது.

14 நாடுகள் முழுவதிலும் 2,30,000 பேரை பலி கொண்ட சுனாமி பேரலையின் கோர தாண்டவத்தை நினைவு கூறும் நாளாக டிசம்பர் 27 “ஆழிப்பேரலை நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 17வது ஆண்டான இன்று பொதுமக்கள் சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.