மாட்டுச் சாணத்தில் கோடிங் அடித்து... மகளுக்கு கார் பரிசளித்த தந்தை !

cow dung
sinoj kiyan| Last Modified புதன், 8 ஜனவரி 2020 (16:03 IST)
திருமணம் ஆகப்போகின்ற மகளுக்கு பெற்றோரின் சார்பில் பரிசுப் பொருள் வழங்குவர். அந்தவகையில், மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது மகளின் திருமணத்துக்கு மாட்டுச் சாணத்தால் கோடிங் அடிக்கப்பட்ட ஒரு வாகனத்தை பரிசளித்துள்ளார். 
மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் வசித்து வருபவர் நவ்நாத் டுதால். இவர் மருத்துவராக பணியாற்றுகிறார். இவர் தனது மகளின் திருமணத்துக்கு மாட்டுச் சாணதால் கோடிங் செய்யப்பட்ட ஒரு காரை பரிசளித்துள்ளார்.
 
மாட்டுச் சாணத்தில் நன்மையை மற்றவர்களுக்கும், தெரியப்படுத்த வேண்டும் என்பதற்குத்தான் இந்த வித்தியாசமான சிந்தனை செய்ததாகக் கூறியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :