வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (22:02 IST)

திருமணத்திற்கு முந்தைய நாள் திடீரென அமெரிக்கா பறந்த மணமகள்: காரணம் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்

பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்ட நிலையில் திடீரென திருமணத்துக்கு முந்திய நாள் மணப்பெண் அமெரிக்காவுக்கு பறந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பெங்களூரை சேர்ந்த தினேஷ் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கும், அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஒரு இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணத்தை திருப்பதியில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். திருமணச் செலவு அனைத்தும் மணமகன் வீட்டாரை சார்ந்தது என்றும் முடிவு செய்யப்பட்டது 
 
இதனையடுத்து திருப்பதியில் மண்டபம், சாப்பாடுக்கு நட்சத்திர ஓட்டல் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்காக அறைகள் என லட்சக்கணக்கில் மணமகன் விட்டார்கள் செலவு செய்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் திடீரென மணமகள் அமெரிக்காவுக்கு பறந்து சென்று விட்டார். இதுகுறித்து தினேஷ் அவரிடம் போன் செய்து கேட்ட போது ’உங்களுடைய மூக்கு பெரிதாக இருப்பதாக என்னுடைய தோழிகள் கிண்டல் செய்கிறார்கள். அதனால் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்பதால் அமெரிக்காவுக்கு வந்து விட்டேன். இந்த திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளார் 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் திருமணத்திற்குப் பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரி செய்து கொள்கிறேன் என்று சமாதானப் படுத்தியும் அந்தப் பெண் சமாதானம் ஆகவில்லை என்றும் இதனால் திருமணம் நின்று போனதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தினேஷ் வீட்டார்கள் மணமகள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது போலீஸ் புகார் அளித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது