வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (23:06 IST)

ஜியோ -கூகுள் கூட்டணியில் புதிய ஸ்மார்ட்போன்கள்

இந்த அவசர உலகில் மக்களை தொழில்நுட்பம் ஆட்டிப் படைக்கிறது. மனித வாழ்வில் தொழில்நுட்பப் பொருட்களின் பயன்படு இன்றியமையாததாக உள்ளது.

காலையில் கண்விழிப்பதும் செல்போன் முகத்தில், கண் உறங்குவதும் செல்போன் முகத்தில் என்பதால் மனிதர்களின் வாழ்க்கை செல்போனிற்குள் அடக்கமாகிவிடுவது போலுள்ளது.

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் 4 ஜி போன் விலை ரூ.400 மற்றும் ரூ.700 என 2 விலைகளின் விற்பனை செய்யவுள்ளதாகக் கூறியுள்ளது.

ஏற்கனவே ஜியோ சிம்மில் புரட்சி செய்த மாதிரி செல்போன் புதிய புரட்சி ஏற்படும் எனவும் இது குறைந்த விலையாக உள்ளதால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்,  ரிலையன்ஸ் ஜியோ – கூகுள் கூட்டணியில் உருவாகியுள்ள 2 புதிய மொபைகள் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி சந்தையில்  அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் பேசிக் ரூ.5000, ஜியோ போன் நெக்ஸ்ட் அட்வான்ஸ்டு ரூ.7,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.