1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:51 IST)

பண மோசடி செய்யும் 8 செயலிகள் நீக்கம்! ப்ளேஸ்டோர் அதிரடி! – என்னென்ன செயலிகள்?

பண முதலீடு செய்வதன் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் என மோசடியில் ஈடுபட்டதாக 8 செயலிகளை ப்ளே ஸ்டோர் நீக்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைல்கள் பயன்பாடு அதிகரித்துவிட்ட சூழலில் பல்வேறு செயலிகள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில் சமீப காலமாக பிட்காயின், ட்ரேடிங் உள்ளிட்ட பெயர்களில் பிரபலமாகும் செயலிகள் பல வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்த நடவடிக்கையாக கூகிள் ப்ளே ஸ்டோர் 8 செயலிகளை நீக்கியுள்ளது. அவையாவன, BitFunds, Bitcoin Miner, Bitcoin BTC, Crypto Holic, Daily Bitcoin Rewards, Bitcoin 2021, MineBit Pro, Etherium ஆகியவையாகும். இந்த செயலிகள் ப்ளேஸ்டோரில் நீக்கப்பட்டிருந்தாலும், முன்னதாக இன்ஸ்டால் செய்த பயனாளர்கள் செல்போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட ஆப் ஸ்டோர் பரிந்துரைக்கும் செயலிகளை தவிர்த்த மூன்றாம் தர செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.