பெகாசஸ் உளவு வேலைகளை நிறுத்த வேண்டும்! – வாட்ஸப் தலைவர் வில் கெத்கார்ட் கருத்து!

Will cathcard
Prasanth Karthick| Last Modified திங்கள், 19 ஜூலை 2021 (15:42 IST)
இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் உளவு வேலைகளை செய்ததாக உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ தயாரிக்கும் பெகாசஸ் மென்பொருள் உலகம் முழுவதும் உளவு வேலைகளில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வாட்ஸப் நிறுவன தலைவர் வில் கெத்கார்ட் “இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரிக்கும் மிகவும் ஆபத்தான பெகாஸச் உளவு மென்பொருள் கோரமான மனித உரிமை துன்புறுத்தலை உலகம் முழுவதும் செய்கிறது. இதை தடுத்து நிறுத்தியாக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :