1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. new restrictions for online games

ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்: 1 லட்சம் கணக்குகள் முடங்கியதாக தகவல்!

ஆன்லைன்
ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆன்லைன் விளையாட்டின் நிர்வாகம் ஒரு லட்சம் முறைகேடான கணக்குகளை நிரந்தரமாக முடக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்தியாவில் பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாற்றாக ’பாட்டில் கிரவுன்ஸ் மொபைல் இந்தியா’ என்ற விளையாட்டு கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது 
 
இந்த நிலையில் பாட்டில் கிரவுன்ஸ் மொபைல் இந்தியா விளையாட்டை ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்கி விளையாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன/ இதுகுறித்த முறைகேட்டில் ஈடுபட்ட சுமார் ஒரு லட்சம் கணக்குகளை நிரந்தரமாக முடக்கி உள்ளதாக ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது
 
மேலும் இந்த விளையாட்டை ஆன்லைனில் விளையாடுவதற்கு மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எவ்வளவு? மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!