இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எவ்வளவு? மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!
இந்தியாவில் இன்றைய நிலையிலும் ஒமிக்ரான் பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை அலுவலகம் அறிவித்துள்ளது
கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு பரவி வருகிறது என்பதும் படிப்படியாக பரவிய இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது 17 மாநிலங்களில் பரவி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் தற்போது 17 மாநிலங்களில் 358 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 114 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது
அதிகபட்சமாக மகாராஷ்டிர நிலத்தில் தற்போது 46 பேர் ஒமிக்ரான் பாதிப்பில் உள்ளனர் என்றும் டெல்லியில் 44 பேர்கள், தெலுங்கானாவில் 38 பேர்கள், தமிழகத்தில் 34 பேர் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 16 பேர், குஜராத்தில் 25 பேர், கேரளாவில் 27 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதாக மத்திய ஆதாரத் துறை அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.