தொடர்புடைய செய்திகள்
- தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு
- மருத்துவமனையில் இடம் இல்லை; மரத்தடியில் சிகிச்சை! – மருத்துவமனைக்கு சீல்!
- 2.76 லட்சம் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்
- 45 வயதுக்கு மேற்பட்ட தனது தொழிலாளர்களுக்கு தடுப்பூசி… ஏற்பாடு செய்யும் அல்லு அர்ஜுன்!
- அந்த மகிழ்ச்சியான செய்தியை தோனிதான் கூறினார்… ரெய்னா நெகிழ்ச்சி!
கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் !
கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது.
முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,57,72,400 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு...
வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
