1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 மார்ச் 2022 (09:46 IST)

உக்ரைனிலிருந்து நேபாள மக்களை மீட்ட இந்தியா! – நேபாள பிரதமர் நன்றி!

உக்ரைனில் சிக்கிய நேபாள மக்களை மீட்க உதவியதற்காக நேபாள பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பல்வேறு நாட்டு மக்களும் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்களும் சிக்கி தவித்த நிலையில் அவர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்டு ஆபரேஷன் கங்கா சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய அரசு தாயகம் அழைத்து வந்தது.

ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் இந்தியர்களை மட்டுமல்லாமல் நேபாள நாட்டு மக்கள் 4 பேரையும் இந்திய அரசு மீட்டு அழைத்து வந்தது. இந்தியாவின் இந்த உதவிக்கு நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.