முடிவுக்கு வருகிறதா போர்? ஜெலன்ஸ்கி கூறியதன் பின்னணி என்ன?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைன் ராணுவம் முக்கியமான திருப்புமுனை மற்றும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
உக்ரைன் மீது கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் புதின் முக்கிய அறிவிப்பு ஒன்றினால் இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
அதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது, உக்ரைன் ராணுவம் முக்கியமான திருப்புமுனை மற்றும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் உக்ரைன் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.