1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை இளைஞர் திடீர் மனமாற்றம்!

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை இளைஞர் திடீர் மனமாற்றம்!
உக்ரேன் ராணுவத்தில் சேர்ந்த கோவையைச் சேர்ந்த இளைஞர் திடீரென மனமாற்றம் ஏற்பட்டு நாடு திரும்ப உள்ளதாக தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் இராணுவத்தில் சேர பலரும் முன்வந்தனர். இந்த நிலையில் கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் இராணுவத்தில் சேர்ந்த தகவல் வெளியானது 
 
இது குறித்த புகைப்படங்களும் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இராணுவத்தில் சேர்ந்த கோவை இளைஞர் சாய் நிகேஷ் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இதனை அடுத்து தனது மகனை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.