உக்ரைன் கொரோனாவால் கடுமையாய் பாதிக்கப்படும்? WHO கணிப்பு
உக்ரைனில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு போர் வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா வசமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவுடனான போரின் காரணமாக உக்ரைனில் புதிய கொரோனா தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடன் தொடர்ந்து போர் புரிந்து வருவதால் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும், உக்ரைன் சுகாதாரத்துறை நிறுத்தியுள்ளது.
அதோடு கொரோனா சோதனைப் பணிகளும் அதற்கான சிகிச்சைப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த காரணங்கள் அனைத்தும் உக்ரைனில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.