1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (17:31 IST)

கார்கிவ்வில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேற அறிவுரை!

உக்ரைனின் கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போரில் உலக நாடுகள் பல உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுத உதவி செய்வதாக அறிவித்துள்ளன. உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா மெல்ல மெல்ல தாக்கி அபகரித்து வருகிறது.
 
இந்நிலையில் உக்ரைனின் கார்கிவில் உள்ள கராசின் தேசிய பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கட்டடம் மற்றும் கார்கிவின் காவல்துறை கட்டடத்தில் தாக்குதல் நடந்தது. ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு பாதிக்கப்பட்ட கராசின் தேசிய பல்கலைக்கழக கட்டடம் மற்றும் காவல் நிலையத்தில் யுக்ரேனிய தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனைத்தொடர்ந்து உக்ரைனின் கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் பெசோஷின், பாபாயி உள்ளிட்ட பகுதிகளை நோக்கி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு நேரப்படி இன்று மாலை 6 மணிக்குள் கார்கிவிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.