புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:01 IST)

நாசிக் பண அச்சக ஊழியர்களுக்கு கொரோனா! – பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாசிக் பண அச்சக ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் அச்சகம் மூடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நாசிக் அச்சகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 40 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. அதையடுத்து நாசிக் அச்சகம் 5 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த மாதங்களில் மூன்று முறை நாசிக் பண அச்சகம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.