வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

Last Modified திங்கள், 11 ஜூன் 2018 (20:31 IST)
முன்னாள் பாரத பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான அடல்பிஹாரி வாஜ்பாய் சற்றுமுன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் வாஜ்பாய் ரெகுலரான உடல் பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாஜ்பாயை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார், மோடி மட்டுமின்றி வாஜ்பாயின் உடல்நலம் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோரும் நேரில் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று விசாரித்தனர்.

கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்த வாஜ்பாயை பாஜகவை பிடிக்காதவர்களுக்கு பிடிக்கும் என்பதும் இன்று வரை இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமா் என்று மக்களால் போற்றப்பட்டு வருபவர் வாஜ்பாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :