மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் நரேந்திர மோடி! – அமித்ஷா, குமாரசாமி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்பு!
இந்திய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.
இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக கூட்டணி பெறும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர், அதன் அடிப்படையில் இன்று பதவியேற்பு விழா டெல்லியில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இதில் அதானி, அம்பானி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இதில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி பிரமாணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து அமித்ஷா, குமாரசாமி, ஜெய்சங்கர், ஜிதன் ராம் மஞ்சி, ராஜ்நாத் சிங் உள்ளிடோரும் தொடர்ந்து பதவி பிரமாணம் செய்து வருகின்றனர். யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K