1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2024 (18:05 IST)

இணை அமைச்சர் பதவியை மறுத்த அஜித் பவார் கட்சி! அமைச்சரவையில் இடம் இல்லை!

PM Modi Ministry
இன்று பாஜக கூட்டணிகள் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் இணை அமைச்சர் பதவி வாய்ப்பை அஜித் பவார் கட்சியை சேர்ந்த எம்.பி நிராகரித்துள்ளார்.



இந்தியா முழுவதும் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் போட்டியிட்ட நிலையில் மகாராஷ்டிராவில் துணை முதல்வரான அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டு பல இடங்களில் வென்றது. தற்போது பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைப்பதால், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பல பதவிகளையும் பிரித்து அளித்து வருகிறது.

அந்த வகையில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி பிரஃபுல் படேலுக்கு மத்திய இணையமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் பாஜக வழங்க வந்த இந்த இணையமைச்சர் பதவியை பிரஃபுல் மறுத்துவிட்டார். இவர் முன்னதாக நாடாளுமன்றத்தில் கேபினேட் அமைச்சராக பதவி வகித்தவர். அதனால் தற்போது இணை அமைச்சராக பதவி ஏற்க அவருக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இந்த பதவியை அவர்கள் புறக்கணித்ததால் அமைச்சரவையில் அஜித் பவாரின் கட்சி இடம்பெறவில்லை என்றாகிறது.

Edit by Prasanth.K