வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2024 (16:41 IST)

குலாப்ஜாமூனில் கரப்பான்பூச்சி.. IRCTC உணவால் பயணி அதிர்ச்சி! – வைரலாகும் வீடியோ!

Cockroach in IRCTC Food
ரயிலில் IRCTC கேண்டீனில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி ஊர்ந்து செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



இந்திய ரயில்வேயில் செயல்படும் நீண்ட தொலைவு ரயில்களில் கேண்டீன்களை IRCTC நடத்தி வருகிறது. ரயிலில் பயணிப்பவர்கள் டிக்கெட் புக் செய்யும்போதே ஐஆர்சிடியில் உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆனால் பல சமயங்களில் ஐஆர்சிடிசியால் வழங்கப்படும் உணவுகள் குறித்து பயணிகள் அடுக்கடி புகார்கள் அளிப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கோரக்பூரிலிருந்து மும்பை செல்லும் ரயிலில் ஐஆர்சிடிசி உணவை பயணி ஒருவர் ஆர்டர் செய்துள்ளார். அதை திறந்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த குலோப்ஜாமூனில் கரப்பான் பூச்சி ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்த அவர் அதுகுறித்து புகாரும் அளித்துள்ளார்.

அதேபோல காசி விரைவு ரயிலிலும் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் புழு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் கொடுத்து உணவு வாங்கும் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி தரமான உணவை வழங்கு ரயில்வே துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K