1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Nagaland man married 37th marriage

28 மனைவிகள், 35 குழந்தைகள் முன் 37வது முறை திருமணம் செய்த நபர்!

நாகலாந்து
28 மனைவிகள், 35 குழந்தைகள் முன் 37வது முறை திருமணம் செய்த நபர்!
தனது 28 மனைவிகள், மற்றும் 35 குழந்தைகள் முன் 37 ஆவது முறையாக திருமணம் செய்து கொண்ட நபர் ஒருவரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
 
நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஏற்கனவே 36 முறை திருமணம் நடந்துள்ளது. இதில் 28 மனைவிகள் தற்போது உயிரோடு உள்ளனர். அவர்களுக்கு 35 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 37 வது முறையாக தற்போது அந்த நபர் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். தனது 28 எட்டு மனைவிகள் 35 குழந்தைகள் 126 பேரக் குழந்தைகள் முன்னிலையில் அவர் புதிய பெண்ணுக்கு தாலி கட்டினார். இந்த திருமணத்தை அவரது குடும்பத்தினர் விமரிசையாக கொண்டாடினர் என்பதும் 37வது திருமணத்தின்போது குடும்பத்தினர்களை அவருக்கு கைதட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இது குறித்த வீடியோவை நாகலாந்து சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரையில்
பெட்ரோல் விலையைக் குறையுங்கள்… தமிழ்நாடு அரசுக்கு எல் முருகன் கோரிக்கை!