வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (12:18 IST)

நாகலாந்தில் பெட்ரோல் வரி குறைப்பு; மற்ற மாநிலங்களில் எழும் கோரிக்கைகள்!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் நாகலாந்து அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்துள்ளது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில் சமீப காலத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.100 ஐ தாண்டி பல இடங்களில் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து சரக்கு லாரிகள் வாடகை, விளைப்பொருட்கள் விலை என அனைத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாகலாந்து அரசு பெட்ரோல் மீதான வரியை 29.80% லிருந்து 25% ஆக குறைத்துக்கொண்டுள்ளது. டீசலுக்கு 17.50%லிருந்து 46.50% ஆக வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் ரூ.16 வரையிலும், டீசல் ரூ.10.50 வரையிலும் நடப்பு விலையிலிருந்து குறையும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிகளை குறைக்க சொல்லியும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.