திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (11:37 IST)

சிவன் கையில் மதுபானம்; சர்ச்சைக்குள்ளான ஸ்டிக்கர்! – இன்ஸ்டாகிராம் மீது வழக்கு!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சிவனை சர்ச்சைக்குரிய வகையில் ஸ்டிக்கராக செய்ததாக அதன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் புகைப்படங்கள் பதியும் பிரபல சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. பேஸ்புக்கை தாய் நிறுவனமாக கொண்ட இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டிக்கர் வசதியில் சிவன் என தேடினால் சிவன் கார்ட்டூன் ஒன்று ஒரு கையில் மொபைலும், மறுகையில் மதுபானமும் வைத்துள்ளது போல ஸ்டிக்கர் ஒன்று உள்ளது. இதை கண்ட பலர் இன்ஸ்டாகிராம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் மீது டெல்லியில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த ஸ்டிக்கர் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.