வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (13:44 IST)

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள்! – மர்ம பொருளை வீசியதால் பரபரப்பு!

parliament
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்து வந்த மக்களவை கூட்டத்தின்போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மர்ம பொருளை வீசியதால் பரபரப்பு எழுந்துள்ளது.



நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டம் இன்று வழக்கம்போல புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வந்துள்ளது. அப்போது மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென மக்களவைக்குள் குதித்துள்ளனர். மேலும் புகையை கிளப்பும் ஒரு மர்ம பொருளையும் அவைக்குள் வீசினார். இதனால் எழுந்த புகை காரணமாக பீதியடைந்த மக்களவை உறுப்பினர்கள் அலறியடித்து வெளியேறினர்.

இந்த பரபரப்பால் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களவைக்குள் அவர்கள் நுழைந்தது எப்படி? மர்ம பொருளை சோதனையில் சிக்காமல் உள்ளே கொண்டு வந்தது எப்படி? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Edit by Prasanth.K