செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (17:17 IST)

2 மாதத்தில் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா! – அதிர்ச்சி தகவல்!

கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படும் நிலையில் இரண்டாம் அலையிலெயே 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா முதலாவது அலை பரவலின்போது முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதை இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மூன்றாம் அலை பரவினால் அதனால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் அதற்கு முன்னரே மூன்றாம் அலையை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்குள்ளாக 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 9 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளே 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 வயதிலிருந்து 19 வயதிற்குட்பட்டோர் 1 லட்சத்து 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் குழந்தைகளுக்கு கொரோனா நெறிமுறைகளை பின்தொடர செய்தலும், பெற்றோர்கள் கவனத்துடன் செயல்படுவதும் அவசியம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.