ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (16:27 IST)

தனுஷ் மிஸ் செய்த கதை, இப்போது சிவகார்த்திகேயனிடம்!

சிவகார்த்திகேயன் இப்போது டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இந்த கதை அவருக்கு முதலில் சொல்லப்பட வில்லையாம்.

சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ள டான் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளாராம். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் சூரி, பால சரவணன், முனீஸ்காந்த், புகழ், சிவாங்கி  மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை இயக்குனர் அட்லியின் உதவியாளர் சிபி சக்ரவர்த்தி இயக்கி வருகிறார். ஆனால் இந்த கதையை முதலில் சத்யஜோதி பிலிம்ஸுக்காக தனுஷ் நடிப்பில் உருவாக்கவே இயக்குனர் விரும்பினாராம். ஆனால் தயாரிப்பு தரப்பு நிறுவனம் கதை பிடித்தும் சரியாக பதில் சொல்லாததால் சிவகார்த்திகேயன் வசம் ஒதுங்கி விட்டாராம்.