கொஞ்ச நாளைக்கு பாலிவுட் வேண்டாம்…. பிரபுதேவா எடுத்த முடிவு!

Last Modified வெள்ளி, 21 மே 2021 (16:22 IST)

பாலிவுட்டில் இன்னும் கொஞ்ச நாளைக்கு படம் வேண்டாம் என இயக்குனர் பிரபுதேவா முடிவு செய்துள்ளார்.

நடன இயக்குனராக அறியப்பட்ட பிரபுதேவா திடீரென்று நடிகரானார். பின்னர் திடீரென்று இயக்குனராக அறிமுகமானார். இந்தியில் போக்கிரி படத்தின் ரீமேக்காக வாண்டட் படத்தை இயக்கி வெற்றியோடு கால்பதித்தார். அதன் பின்னர் வரிசையாக சல்மான் கானை வைத்து படங்களை இயக்கினார். இந்த படங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்த நிலையில் கடைசியாக ராதே திரைப்படத்தில் இணைந்தனர்.

கொரியன் படத்தைப் பார்த்து அதிசயித்து ரீமேக் செய்தனர். ஆனால் பிரபுதேவாவின் மோசமான திரைக்கதையால் படம் அட்டர் ப்ளாப் ஆகி விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்டு வருகிறது. இதனால் பிரபுதேவா மீது சல்மான் கான் பயங்கர அதிருப்தியில் இருக்கிறாராம். அதனால் இனிமேல் கொஞ்ச நாளைக்கு பாலிவுட் வேண்டாம் என முடிவெடுத்து கோடம்பாக்கத்திலேயே முகாமிட ஆரம்பித்து விட்டாராம்.இதில் மேலும் படிக்கவும் :