வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (16:35 IST)

நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவனை சந்தித்த நிதீஷ் வீரா… நெகிழ்ச்சியான தருணம்!

சமீபத்தில் தமிழ் நடிகர் நீதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவருக்கு சினிமாவில் முதல் முதலாக அடையாளம் தந்தது புதுப்பேட்டையில் அவர் நடித்த மணி கதாபாத்திரம்தான். ஆனால் அந்த படத்துக்கு பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாத போது இயக்குனர் செல்வராகவனை சந்திக்க பலதடவை முயற்சி செய்தும் அவரால் சந்திக்க முடியவில்லையாம்.

சமீபத்தில் நடிகராகியுள்ள செல்வராகவனின் சாணிக்காயிதம் திரைப்படத்தில் நிதிஷ் வீராவும் நடித்துள்ளார். அப்போது செல்வராகவன் அவரை நலம் விசாரிக்க, நடந்ததைக் கூறியுள்ளார். அதன் பின்னர் செல்வராகவன் தனது அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பணியாற்றலாம் என நிதிஷுக்கு நம்பிக்கைக் கொடுத்துள்ளார். ஆனால் அது நிறைவேறுவதற்குள் நிதீஷ் இறந்துவிட்டார் என்று அவரது நண்பர்கள் இந்த தகவலை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

Source வலைப்பேச்சு