1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Monkeys found dead in drinking water trough Shocking incident

குடிநீர்த் தொட்டில் இறந்து கிடந்த குரங்குகள்...அதிர்ச்சி சம்பவம்

telungana
தெலங்கானாவில் குடிநீர் தொட்டியில் நீர் குடிக்க உள்ளே சென்ற குரங்குகள் வெளியே வர முடியாமல் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள நல்கொண்டா மாவட்டம் நந்திகொண்டா பகுதியில் குடிநீர் தொட்டியில் நீர் குடிக்க உள்ளே சென்ற குரங்குகள் வெளியே வர முடியாமல் இறந்தன.
 
அதன்பிறகு சில நாட்கள் இத்தொட்டியில் இருந்து குடிநீரும் அங்குள்ள மக்களுக்கு வி நியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், 30க்கும் மேற்பட்ட குரங்குகளின் சடலங்கள் உள்ளே  இருந்து மீட்கப்பட்டு, வனப்பகுதியில் புதைக்கப்பட்டன. 
 
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
கள்ள மது விற்று, கப்பம் கட்டிய செந்தில் பாலாஜி,ஸ்டாலின் அவர்களுக்கு செயல் வீரராம்-எடப்பாடி பழனிசாமி