வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (19:13 IST)

முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதா கைது!

பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகளுமான கே.கவிதா இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, ஹைதராபாத்தில் உள்ள கவிதாவுக்கு சொந்தமான இடங்களில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
 
4-5 மணி  நேரங்கள் நடந்து வந்த சோதனைக்கு பிறகு  கவிதாவுக்கு அமலாகத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இதையடுத்து, அவர் டெல்லிக்கு கொண்டு செல்லப்படலாம் என தகவல் வெளியாகிறது.
 
கவிதா கைது செய்யப்பட்டதை  கண்டித்து, அமலாக்கத்துறைக்கு எதிராக பி.ஆர்.எஸ். கட்சித் தொண்டர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.