புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (13:57 IST)

காரை மறித்து ஜெய் ஸ்ரீராம் – உச்சகட்ட கோபத்தில் மம்தா !

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் காரை மறித்து ஜெய் ஸ்ரீராம் எனக் கூறி கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளை வென்றுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் திருணாமூல் காங்கிரஸ் எம்.ல்.ஏ.கள் இருவரும் 60 கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.

இதனால் உச்சகட்ட அதிருப்தியில் இருக்கிறார் மம்தா பானஜி. நேற்று பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்த மம்தா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக அவர் தனது காரில் சென்றபோது சிலர் காரை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மம்தா காரை விட்டு இறங்கி அவர்களை ஆங்கிலத்தில் கோபமாக திட்டினார். அதன் பின் காரில் ஏறி சென்றார். மம்தா கோபமாக பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.