1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Modi wishes on Manmohan singh birthday

மன்மோகன் சிங்கின் பிறந்த நாளுக்கு, முதல் ஆளாக வாழ்த்து கூறிய மோடி..

மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்ததினத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்தார் பிரதமர் மோடி.

முன்னாள் பிரதமரும், தற்போதைய மாநிலங்கவை உறுப்பினராகவும் திகழும் டாக்டர் மன்மோகன் சிங், இன்று தனது 87 ஆவது பிறந்ததினத்தை இன்று கொண்டாடுகிறார். கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை இருமுறை இந்திய நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையையும் உடையவர். இவர் ஒரு பொருளாதார நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, நிதியமைச்சராகவும் இருந்தவர்.

இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள பல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். பிரதமர் மோடி, இன்று அதிகாலை 4.41 மணிக்கே தனது டிவிட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங்கிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ”நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.

About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
மறக்க முடியாத டிக்கிரி; மரணமடைந்த சோகம்!