செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்லும் மோடி!

இந்திய பிரதமர் மோடி கொரோனா காரணமாக வெளிநாட்டு பயணங்களைத் தவிர்த்து வந்தார்.

மோடி இந்திய பிரதமர் ஆனதில் இருந்து அதிகளவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வந்தார். இந்திய பிரதமர்களிலேயே அதிகமாக வெளிநாடு சென்ற பிரதமர் மோடிதான். இந்நிலையில் இந்த பயணங்கள் குறித்தும் அதற்கான செலவுகள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 15 மாதங்களாக அவர் எந்த வொரு வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. இப்போது அவர் வங்கதேசத்தின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 26 ஆம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்லவுள்ளார். இது வங்கதேசத்தின் 50 ஆவது சுதந்திரதினம் என்பது குறிப்பிடத்தக்கது.