வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 ஜூலை 2018 (19:15 IST)

மோடி உடலில் விஷ ஊசி; சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி

ராகுல் காந்தி மோடியை கட்டியணைத்தற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சையான கருத்து ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை அதிர வைத்தார்.
 
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று மோடியை கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத மோடி திரும்பிச்சென்ற ராகுலையின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து அவர் பேசியதற்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கினார். 
 
இந்த சம்பவம் நேற்று முதல் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
 
ராகுல் காந்தி கட்டியணைக்க, பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது ரஷ்யர்களும், கொரியர்களும் விஷ ஊசி செலுத்தி தங்களது எதிரிகளை வீழ்த்த முயல்வார்கள். மோடி உடனடியாக மருத்துவமனை சென்று தனது உடலில் ஏதேனும் விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளதா என்று பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
 
இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.