வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஜூலை 2018 (21:55 IST)

என் இருக்கையை பிடிக்க ஏன் அவசரம்: ராகுல் காந்திக்கு மோடி கேள்வி

என்னுடைய பிரதமர் இருக்கையை பிடிக்க ஒருவர் அவசரப்படுகிறார். ஏன் இந்த அவசரம்? இந்த இருக்கையை நீங்கள் என்னிடம் இருந்து பறிக்க முடியாது. இது மக்கள் கொடுத்த இருக்கை. அவர்களால் மட்டுமே இந்த இருக்கையை என்னிடம் இருந்து பிரிக்க முடியும் என்று பிரதமர் மோடி இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின்போது பேசினார்.
 
மேலும், ஒரு உறுப்பினர் என்னிடம் ஓடி வந்து விலகி நில்லுங்கள், விலகி நில்லுங்கள் என்றார். என்ன அவசரம், மக்கள் மீது நம்பிக்கை இல்லையா உங்களுக்கு என்று அவருக்கு பதிலளித்தேன் என்று கூறிய பிரதமர் மோடி, 'நாட்டின் வளர்ச்சியை நோக்கி கூட்டு முயற்சியே இந்த அரசின் நோக்கம் என்றும், நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் குழப்பி வருவதாகவும், நாட்டின் வளர்ச்சியை அவர்கள் நம்பவில்லை என்றும் கூறினார்.
 
மேலும் கருப்பு பணத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும், இந்த போராட்டத்தால் எதிரிகளை சம்பாதித்துள்ளேன் என தெரியும் என்றும் கூறிய பிரதமர் மோடி, 'வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர சிவனை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் பெரும்பான்மை மிக்க இந்த அரசின் மீது நம்பிக்கை வையுங்கள் என்றும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரியுங்கள் என்றும், எங்கள் அரசு மீது நேரடியாக குற்றம்சாட்டுங்கள் என்றும், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் வேண்டாம் என்றும் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். 
 
பிரதமர் பேசி முடிந்ததும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்