1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Modi's request 850 prisoners released saudi Prince orders

மோடியின் வேண்டுகோள்... 850 கைதிகள் விடுதலை ... சவூதி இளவரசர் உத்தரவு....

Modi
நம் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 850 கைதிகள் சவூதி அரேபியாவில் உள்ள சிறைகளில் உள்ளனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இவர்களை விடுவிக்க வேண்டுமெனெ சௌதி இளவரசர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த சவூதி இளவரசர் பிரதமர் மோடியுடன் பலதரப்பு விஷயங்களை குறித்து பேசினர். அதில் ஒன்றாக சவூதியில் உள்ள இந்திய சிறைக் கைதிகளை விடுவிக்குமாறு பிரதமர் மோடி, இளவரசரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் சவூதியில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டு இளவரசர் உத்தவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வோரின் என்ணிக்கையை 2 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
கழுவி கழுவி ஊத்தி புக்கெல்லாம் எழுதுனீங்களே? பாமகவை வச்சு செய்த கமல்