புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (14:13 IST)

’என்னை இந்து மதத்தின் விரோதி என்கிறார்கள் ’- ஸ்டாலின் வேதனை

இன்னும் சில வாரங்களில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள  நிலையில் இதில் கூட்டணி வைப்பதற்காக பல கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்க தேசிய கட்சிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ஓவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று திமுக சார்பில் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் இணைந்து மக்களிடம், குறைகள் கேட்டு வருகின்றனர். பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். வரும் தேர்தலில் பலமுனைப் போட்டிகள் இருக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று மதுரையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லீம் மாநில மாநாட்டில் கலந்து கொணட ஸ்டாலின் பேசியதாவது.
 
’திமுகவுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் எப்பொதும் பாசமும், நல்லுறவும் உண்டு. இதை யாராலும் பிரித்திட முடியாது. தேர்தலுக்காகவும் அரசியலுக்காவும் சிலர் சிறுபாண்மையினர் போல நடிப்பார்கள். ஆனால் திமுக அப்படி அல்ல...இஸ்லாமியருக்கும் திமுகவுக்கும் இடையேயான நட்பு தொடக்க காலம் முதல் இருந்து வருகிறது.
 
இந்த இஸ்லாம் மாநாட்டில் வைத்து நான் மோடியை குற்றம் சாட்டினால், தாக்கிப் பேசினால்  நாளைக்கே என்னை இந்து மதத்தின் விரோதி என்று சொல்வார்கள்.பாஜகவை எதிர்ப்பது என்பது வேறு, இந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு. பாஜகவினர் தான் உண்மையில் இந்து மதத்துக்கும் இந்திய நாட்டுக்கும் எதிரிகள். அரசியலில் கூட மதத்தை கலந்து மதத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துபவர்கள்’ இவ்வாறு அவர் பேசினார்.