தீக்கு இரையான 78 பேர்: வங்கதேசத்தில் கோர விபத்து

Last Updated: வியாழன், 21 பிப்ரவரி 2019 (16:34 IST)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வங்கதேச மாவட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 78 பேர் பலியாகியுள்ளனர்.
 
பல மாடி கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன பொருட்கள் சேமித்து வைத்திருந்த கிடங்கு இந்த கட்டடத்தில்தான் இருந்தது. இந்த தீ விரைவாக பக்கத்து கட்டடங்களுக்கும் பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த தீ விபத்தில் 78 பேர் வரை பலியானதாக தெரிகிறது. சிலிண்டரில் ஏற்பட்ட கசிவிலிருந்தே இந்த தீ உருவாகி உள்ளது. இந்த கட்டடத்தில் ரசாயன குடோனும் இருந்ததால் தீ வேகமாக பரவி உள்ளது என்று முதற்கட்ட விசாரணை தகவல் தெரிவிக்கின்றன. 
 
தீ விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களும் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழமையான செளக்பஜாரில்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது இங்கு தெருக்கள் குறுகலாக இருக்கும். வீடுகளும் நெருக்கமாக இருக்கும்.
 
கட்டட விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது வங்கதேசத்தில் பெரும் பிரச்சனையாக உள்ளது. டாக்காவிலுள்ள ராணா பிளாசாவில் 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் மேலும் படிக்கவும் :