செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 5 அக்டோபர் 2019 (13:27 IST)

குறைந்தது வட்டி; சரிந்தது பங்குச்சந்தை: வளர்ச்சி மதிப்பீடு எதிரொலி!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததை தொடர்ந்து பங்குசந்தை புள்ளிகள் தொடர் சரிவை சந்தித்துள்ளன.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. அதை தொடர்ந்து வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இதனால் உள்நாட்டு சிறு தொழில் மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கு வங்கி கடன் வட்டிகள் சுமை குறையும்.

மேலும் இந்த ஆண்டின் ஜிடிபி மதிப்பு இலக்கை 6.9 சதவீதம் உயர்த்த நிர்ணயித்திருந்த அரசு இலக்கினை 6.1 ஆக குறைத்துள்ளது. இலக்கு குறைப்பு மற்றும் ரெப்போ வட்டிவிகித குறைப்பால பங்குசந்தைகளில் புள்ளிகளும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் 434 புள்ளிகள் குறைந்து 37, 673 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இது தற்காலிகமான வீழ்ச்சிதான்! உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் தொழில்கள் பெருகும்போது இந்த பங்குசந்தை புள்ளிகள் சமன் செய்யப்பட்டுவிடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.