மகாராஷ்டிரா, ஹரியானா இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆரம்பத்திலேயே இரு மாநிலங்களிலும் பாஜக அதிக தொகுதிகளில் முன்னணியில் உள்ளது
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளிவந்திருக்கும் 103 தொகுதிகளில் 68 தொகுதிகளில் பாஜக-சிவசேனா கூட்டணி முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் இரண்டு தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன
அதேபோல் ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளிவந்திருக்கும் 51 தொகுதிகளில் 40 தொகுதிகளில் பாஜக-சிவசேனா கூட்டணி முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 3 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன
முன்னணி நிலவரத்தை வைத்து பார்க்கும்போது கருத்துக்கணிப்பில் கூறியது போல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது